Sunday, April 6, 2014

சாப்பிட வேண்டும்



மீன் சாப்பிடக்கூடாது
என்றிருந்தேன்
இன்று சாப்பிடுகிறேன்
மீனவர்கள்
சாப்பிட வேண்டும்
என்பதற்காக

மு.பேச்சியம்மாள்
முதலாமாண்டு இயற்பியல்

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஆறாம் விரல் கவிதைநூல் வெளியீட்டு விழா



மாணவர்களின் கவித்திறமையை வெளியே கொண்டுவரும் பொருட்டு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்
5.4.2014 அன்று காலை 10 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் சங்கமம்-2014 இளைஞர் கலைவிழாவை  மாணவர் பேரவையும் இளைஞர் நலத்துறையும் இணைந்து நடத்தின.மாணவர் பேரவைத் தலைவர் அப்துல் முனாப் வரவேற்றுப் பேசினார்.

சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி,மதிதா இந்துக் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.சின்னத்தம்பி கலந்துகொண்டு ஆறாம் விரல்எனும் தலைப்பில் தமிழ்த்துறையும் மாணவர்பேரவையும் இணைந்து உருவாக்கியுள்ள கவிதைத்தொகுப்பை வெளியிட முதல் பிரதியைக் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் கே.ஏ.மீரான் முகைதீன் அவர்கள் முதல்பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள்.மாணவர் பேரவைத் தேர்தல் அதிகாரி பேராசிரியர் ரபி அகமது ,அரசுதவி பெறா வகுப்புகளின் இயக்குனர் முனைவர் நவராஜ் சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.முஹம்மது சாதிக் விழா வாழ்த்துரை வழங்கினார்.இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச.மகாதேவன் சங்கமம்-2014 இளைஞர் கலைவிழாவை  ஒருங்கிணைத்து நடத்தினார். மாணவர் பேரவைச் செயலாளர் தினிஷா நன்றி கூறினார்.
முனைவர் ச.மகாதேவன்